‘நயன்தாராவை மணப்பேன்’ என்று மும்பையில் நடந்த ‘உருமி’ ஷூட்டிங்கின்போது சமீபத்தில் அறிவித்தார் பிரபுதேவா. இதையடுத்து அந்த ஷூட்டிங்கில் இருந்த பிருத்விராஜ், ஜெனிலியா, நித்யா மேனன் போன்றவர்கள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.நட்சத்திர கூட்டத்தில் ஜொலித்த யூனிட்டில் எப்போதும் கலகலப்பு. ஒரு வரி கதைகள் சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரபு தேவா. அவரது பேச்சில் மயங்கிய நடிகைகள் மெய்மறந்து அவரது முகபாவனைகளை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருந்தனர். மேலும் நடன அனுபவத்தை பிரபு தேவா சொல்லத் தொடங்கியவுடன் ஜெனிலியாவும், நித்யா மேனனும் அவரை சூழ்ந்து கொண்டனர். இடுப்பை வளைத்து ஆடுவது, கால் விரல்களை தரையில் பேலன்ஸ் செய்து ஆடுவது போன்ற அசைவுகளில் நடிகைகளுக்கு சந்தேகம் எழுந்ததால் அதை எப்படி ஆடுவது என்று டிப்ஸ் கேட்டு தொந்தரவு செய்தார்களாம். மூவருக்கும் சளைக்காமல் டிப்ஸ் கொடுத்து அசத்தினார் பிரபு தேவா.
தெலுங்கில் பிகினி அணிந்து படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் பிரியாமணி. அடுத்த கட்டமாக ஹீரோவுக்கு இங்கிலீஷ் கிஸ் தரும் காட்சியில் நடித்துள்ளார். விஜி சிபிவிஸ்தா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரியாமணி நடிக்கிறார். இதில் சுமந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் கட்டத¢தை நெருங்கியுள்ளது. இதுவரை தயாரான காட்சிகளை பட யூனிட் திரையில் பார்த்திருக்கிறது. சுமந்த்&பிரியாமணி ஜோடியின் கெம¤ஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என அனைவரும் பாராட்டினார்களாம். இதையடுத்து இயக்குனர் விஜிக்கு ஒரு யோசனை தோன்றியது. இதில் இருவரையும் முத்தக் காட்சியில் நடிக்க வைத்தால் என்ன என்பதுதான் அது. தயங்கியபடியே பிரியாமணியிடம் கேட்க, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பிரியா. கூச்ச சுபாவம் காரணமாக ஹீரோ சுமந்த் தயங்கினாராம். பின் ஒரு வழியாக அவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் விஜி. இதையடுத்து ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மட்டுமே இருக்க சுமந்த்&பிரியாமணி நடித்த ஆங்கில முத்தக் காட்சி படமாகியுள்ளது. படத்தில் இக்காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்கிறது யூனிட்.
சென்னையில் படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென்று சந்தித்தார் நயன்தாரா. இருவரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பிரபு தேவா – நயன்தாரா திருமணம் நடக்கவிருப்பதாக பேச்சு கிளம்பியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரபு தேவா ரம்லத்தை காதலித்து மணந்த போது, அவருக்கு வீட்டில் பெரும்எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இருவருக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்கள் ரஜினியும் அவர் மனைவி லதாவும்தான்.
இப்போது அந்த ரம்லத்தின் வாழ்க்கை நயன்தாராவால் கேள்விக்குறியாகியுள்ளது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் பிரபு தேவா.
இதை அறிந்த ரம்லத் தனக்கு வேண்டிய பெரியவர்கள் மூலம் பஞ்சாயத்து கூட்டி, ஒரு இறுதியான முடிவைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சன் டிவி நிறுவனத்தின் கேளம்பாக்கம் ஸ்டுடியோவுக்கு விளம்பரப் படப்பிடிப்புக்காக வந்திருந்தார் நயன்தாரா. அப்போது அங்கே வந்த ரஜினி, நயன்தாரா இருப்பதை அறிந்து அவரை வரச் சொல்லி பேசினார். இருவரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஏற்கெனவே, ரஜினியுடன் மூன்று படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பிறகு படங்களே நடிக்காமல் இருந்த நயன்தாராவை மீண்டும் நடிக்கச் சொன்னவர் ரஜினிதான். தனது சிவாஜி படத்திலேயே நயன்தாராவுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்தார். அதன் பிறகுதான் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார் நயன்.
இப்போது பிரபுதேவாவுடன் காதலாகி, அது ரம்லத்தை விவாகரத்து செய்யும் அளவுக்கு வந்திருப்பதால், நயன்தாராவுக்கு ரஜினி அறிவுரை கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிரது 'ரெசிடெண்ட் ஈவில்' ஆஃபடர்ல்’ திரைப்படம். தற்போது பவானி ஐபிஎஸ் படத்தில் முழுமையான ஆக்ஷன் கதாநாயகியாக நடித்து முடித்து அதன் வெளியீட்டுக்காக ஆவலோடு காத்திருகிறார் ஸ்னேகா. படம் வெளியான நேற்று முன்தினம் தனிப்பறவையாக இந்தப் படத்தைப் பார்க்க சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கு வந்திருந்தார் சினேகா.
அவரிடம் ஆக்ஷன் ஹீரோயின் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை பார்க்க வந்தீர்களா என்று கேட்டதற்கு, “ ஐயோ! மில்லா ஜோவிஸோட கிரேட் ஃபேன் நான். என்னோட தலைவின்னு கூட சொல்லுவேன்” என்று ஆச்சர்யப்படுத்தினார். சினேகாவுக்கே மில்லாவை பிடிக்கும்போது தமிழ்ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன?
இதோ ஹாலிவுட் கனவுக் கன்னிகளில் ஒருவராக வலம்வரும் மில்லா ஜோவோவிஸின் ஆபூர்வப் பேட்டி! இவர் வடிகட்டிய வாய்ப்புகளில் மட்டுமே நடிப்பவர். அவரது நடிப்பில் தயாராகி பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான 'ரெசிடெண்ட் ஈவில்' ஆஃபடர்லில் நடித்த அனுபவங்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பேட்டியை சினேகாவுக்கு டெடிகேட் செய்துப்விடலாமா?
இனி மில்லா ஜோவோவிஸ் உங்களோடு…
சாதாரண படத்தில் நடிப்பதை விட ஒரு 3D படத்தில் நடிப்பது அதிக சவாலானதா ?
நிச்சயமாக சவாலான விஷயம்தான். Phantom தொழில் நுட்பம் என்பது சிறந்த நுட்பம்மட்டுமல்ல. நம்மை பயமுறுத்தும் பிசாசு போன்றது. ஏனென்றால் அதை வைத்து அவ்வளவு சாகசங்களை சாத்தியப்படுத்தலாம். நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நுட்பம் அது. அது ராக்கெட் வரை போய் சினிமாவுக்குள் வந்திருக்கிறது. அதற்கேற்றபடி ஒரு வினாடிக்கு 1000 ஃ பிரேம்கள் படம்பிடிக்கும் அந்த கேமராவுக்கு எற்றபடி அதுவும் 3டி தொழில்நுட்பம் சார்ந்த கதையில் நடிப்பது என்பது நிச்சயமாக சவாலான ஒன்றுதான்.
Phantom கேமராவுக்கு ஏற்றபடி என் நடிப்பு, அசைவு, இயக்கம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியிருந்தது. லைவ் ரெக்கார்டிங் என்பதால் பின்னணிக்குரல் பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருந்தது. நான் மிகவும் பயந்து கொண்டிருந்தேன். பயமுறுத்தப்பட்டேன். துப்பாக்கியை கையாளும்போது, ஓடும்போதும், அதை ஸ்லோ மோஷனில் படம் பிடித்தார்கள். இதுபோன்ற காட்சிகளில் நடித்தபோது சினிமாவுக்கு வந்ததை நினைத்து பெருமை பட்டேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை பயந்தேன். ஒடும் போதுகூட ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றத்துடன் பார்வையும் இருக்க வேண்டும். இப்படிப் பலவாறாக சிரமங்களைச் சந்தித்தேன்.
இது மாதிரி படங்களில் உங்களுக்குப் பிடித்தது படைப்புக் கற்பனையா இல்லை… பிரம்மாண்டமா?
எனக்கு இது நாள் வரை பிடித்தது The Axe Man" பாத்திரப் படைப்பின் பிரமாண்டம். படத்தில் அவரது பலம், பிரமாண்டம், மோதல் செமையாக இருக்கும். அவர் என்னுடனும் க்லோருடனும் மோதும் காட்சி அசத்தலாக இருக்கும். அந்த அளவுக்கு கேரக்டர்களில் உயிரோட்டமாக அமைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உடைகள் நிஜமாகப் உருவாக்கப்படவையா? அல்லது "CG" தொழில் நுட்பத்தில் உருவானவையா ?
பெரும்பாலும் நிஜமாகப் உருவாக்கப்பட்டவை. சில இடங்களில் மட்டுமே CG தொழில்நுட்பத்தில் பயன்படுத்திப்பட்டிருக்கும். 3டி படத்தில் நடிப்பது சாதாரண படத்தில் நடிப்பது போலல்ல. மிகவும் சிரமம். அதற்கான நடிப்பு தனியானது எதையும் ஆழமாக அழத்தமாக செய்ய வேண்டியிருக்கும். பாவ்லா காட்ட முடியாது. அடி. என்றால் நிஜ அடியாக இருக்க வேண்டும் உதை என்றால் நிஜ உதைதான். நடிகர் கிம் கோட்ஸ் வாங்கியது எல்லாம் நிஜ உதை தான். (சிரிக்கிறார்) இன்னொரு நடிகரும் நிஜ அடி பட்டதை பார்த்தேன்.
நீங்கள் வீடியோ கேம் விளையாடுவீர்களா?
எனக்கு இதில் விருப்பமில்லை. என் இளைய தம்பி ஒரு கேம்ஸ் பிரியன். அவன் பெரிய கேம்ஸ் விசிறி என்று தோன்றியது. பிறகு நம்மையறியாமல் அந்த உலகத்தில் புகுந்துவிட நேர்ந்தது. அதனால் நேரம் கிடைத்தால் வேறு எதிலாவது கவனம் செலுத்தவே நினைப்பேன். விரும்புவேன்.
இசை போன்றவற்றில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. அதை நடிக்கிற படங்களில் பயன்படுத்த நினைப்பீர்கள்?
எனக்குள் இசையார்வம் மறைந்திருக்கிற சக்தியாக இருக்கிறது. அதை வைத்து இதையெல்லாம் செய்யலாம் என் கிற அளவுக்கு தீர்மானம்இ திட்டம் இல்லை. கை, கால், கண் போல இசையும் எனக்கு இருக்கிற உடல் பாகமாக உணர்கிறேன். இதே படத்தை அடுத்த பாகம் எடுத்தால் இயக்குநர் தயாரிப்பாளர் கேட்டால் என்னிடம் சில ஐடியாக்கள் இருப்பது பற்றிப் பேசுவேன். இசை, பாடல் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நன்றாக இருக்கும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்னொரு ரெசிடெண்ட் ஈவில் வரும் திட்டம் உத்தேசம் உள்ளதா ?
நிச்சயமாக. போ அடுத்த படத்துக்கு கதை எழுது என்றால் கூட எங்களால் முடியும். அந்த அளவுக்கு என்னைப் பாதித்துள்ள விஷயமாக இந்தப் படம், இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கற்பனை உலகத்தில் நாங்கள் குடியேறி விட்டோம். எனக்கு பிடித்த கதை அது. அதை முழுதாகப் படித்து போது அடுத்த என்ன நடக்கும்? என்பதே பெரிய பரபரப்பு விறுவிறுப்பாக இருந்தது.
நடிப்பு: சத்யராஜ், கரண், சுஹானி, கஞ்சா கருப்பு, நாசர்
இசை: பரத்வாஜ்
தயாரிப்பு: உடையார் மூவீஸ்
இயக்கம்: ஆர் அரவிந்தராஜ்
பிஆர்ஓ: டைமண்ட் பாபு
காலம் தப்பி வந்திருக்கிற அரசியல் படம் இந்த இரண்டு முகம். ஊமை விழிகள், உழவன் மகன் காலத்தில் தயார் செய்த கதை போலிருக்கிறது. அதையும் கட்டுக்கோப்பாகச் சொல்ல முடியாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோம்.
வழக்கமான அரசியல்வாதி கதையில் மரபணு மாற்ற பயிர், நவீன பூச்சிக் கொல்லிகளின் தாக்கம், இயற்கை விவசாயம் என இன்றைய பிரச்சனையைக் கையாண்டு பார்த்திருக்கிறார். ஆனால், அதை மனதில் தைக்கும்படி சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ்.
தனது வாழ்க்கையின் ஒரே லட்சியம் எப்படியாவது அமைச்சராகிவிடுவதுதான் என்ற ‘லட்சியத்தோடு’ திரிகிறார் சமையல்காரர் சண்முகராஜனின் மகன் கரண். அதற்கேற்ப அவ்வப்போது அவருக்கு சந்தர்ப்பங்கள் வர, இளைஞர் அணி தலைவராகி, அடுத்த காட்சியிலேயே எம்எல்ஏவாகி, அதற்கும் அடுத்த காட்சியிலேயே மந்திரியாகி உடனே ஊழலும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்!.
இதைப் பார்த்து மனம் பொறுக்காத சத்யராஜ், அவரை நேர்மையான வழிக்குக் கொண்டுவர ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். கரண் திருந்தும் நேரத்தில், அதை எதிர்த்து மோசமான அரசியல்வாதிகள் அரசையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து கரணும் சத்யராஜும் எப்படி அரசைக் காக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
இடையில் கரணுக்கு ஒரு காதல், அந்தக் காதல் நிறைவேறுவதில் திடீர் சிக்கல், நவீன பூச்சி மருந்தால் நண்பன் சாதல்… என கிளைக் கதைகள் வேறு.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார் கரண். ஆனால் வழக்கம் போல ஓவர் ஆக்ஷன் பண்ணாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்.
கிட்டத்தட்ட கெளரவ வேடம் மாதிரிதான் சத்யராஜுக்கு. பெரிதாக வேலையும் இல்லை. இடைவேளைக்கு முன், அவர் கையில் கல்லெடுக்கும் போதே, படத்தின் மிச்சக் காட்சிகளை ரொம்ப எளிதாக யூகிக்க முடிகிறது.
சுஹானி எனும் புதுமுக ஹீரோயின் (தமிழில் தான்.. ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் நடித்தவர்) ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.
வஞ்சக அரசியல்வாதி வேடம் நாசருக்கு. கேட்க வேண்டுமா… ஊதித் தள்ளுகிறார்.
பசுநேசனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் செம கிச்சு கிச்சு. கஞ்சா கருப்பு இருந்தும் நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை.
பரத்வாஜ் இசையில் ஒரு பாடல் ஓகே மற்றபடி மகா மட்டமான பின்னணி இசை. தேவையில்லாத இடங்களிலெல்லாம் சம்பந்தமில்லாமல் பாடல்கள் வந்து இம்சிக்கின்றன.
ஒளிப்பதிவு ஓகே.
மரபணு மாற்ற பயிர்கள், நவீன பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயங்கர விளைவுகள் போன்றவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி அழுத்தமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தால், அரவிந்தராஜின் இந்த மறுபிரவேசம் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்!
மாமனார், மருமகள் தகாத உறவை சித்தரிக்கும் கதை.
ராணுவத்தில் பணிபுரியும் கஜனி மகன் ஹரிஸ் கல்யாண். பிளஸ்-2 மாணவர். சக மாணவி அனகாவை விரும்புகிறார்.
எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கஜினி காயம்படுகிறார். விருப்ப ஓய்வு பெற்று கிராமத்துக்கு திரும்புகிறார். அப்போது மனைவி விபத்தில் சாகிறாள்.
தன்னையும் மகனையும் கவனித்துக் கொள்ள பெண் வேண்டும் என கருதி மகன் காதலிக்கும் அனகாவையே திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்துக்கு பின் ஹரிஸ் கல்யாண் ஆசிரியர் பயிற்சிக்காக வெளியூரில் தங்கி படிக்க செல்கிறார்.
சந்தர்ப்ப சூழ்நிலை கஜினி, அனகாவை உடல்ரீதியாக இணைய வைக்கிறது. இருவரும் கணவன்-மனைவியாக தங்களை ஆக்கிக் கொண்டு வாழ்கிறார்கள்.
படிப்பு முடிந்து திரும்பும் ஹரிஸை தன்னை நெருங்க விடாமல் தவிர்க்கிறார். இருவருக்கும் உள்ள கள்ள உறவு ஹரிசுக்கு தெரிய நொறுங்குகிறார். மூவரின் நிலைமை என்னவாகிறது என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.
கதையில் விரசம் இருந்தாலும் ஹரிஸ் கல்யாண், அனகா, கஜினி மூவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உயிர் கொடுக்கிறார்கள்.
தாய் பாசத்திலும், காதலிலும் நேர்த்தியாக வருகிறார் ஹரிஸ். தந்தை, மனைவி நெருக்கத்தை கண்டு முகம் சுழிப்பதிலும், இருவரும் தப்பானவர்களா இல்லையா என இனம்காண முடியாமல் தடுமாறுவதிலும் “ஸ்கோர்” பண்ணுகிறார். கிளைமாக்ஸ்சில் தந்தையை கடலுக்கு அழைத்து போய் ஜலசமாதி ஆக்குவதில் உஷ்ணம் காட்டுகிறார்.
அனகாவிடம் தேர்ந்த நடிப்பு. மாணவியாக துறுதுறு என வரும் அவர் மாமனாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு கிறங்கடிக்கிறார். கடலில் விழுந்த தன்னை மாமனார் காப்பாற்றி படகில் ஏற்றியதும் அலங்கோலமாக உள்ள ஆடையை அவசர மாக சரி செய்யும் அவர் அலையில் தடுமாறும் மாமனார் மீது விழுந்து அவரது பலாத்காரத்துக்கு உடன்பட்டு அனல் மூட்டுகிறார்.
தப்பு செய்த வருத்தத்தில் புலம்பி கிடக்கும் மாமனாரை காமவெறியில் ஒவ்வொரு கதவாய் தாழிட்டு அவரது படுக்கையறைக்கு வலியபோய் நெஞ்சில் கைவைக்கையில் தேகமெங்கும் காம கொள்ளி வைக்கிறார். ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்து ரெயிலில் விழுந்து சாவது பரிதாபம்.
ராணுவ வீரராக மிடுக்கு காட்டுகிறார் கஜினி. குழி தோண்டும்போது தவறி தன் மேல் விழும் மருமகள் மேல் காமஇச்சை எழுவதும் அதிலிருந்து விடுபட நினைத்து முடியால் தவிப்பதும் நேர்த்தி.
மருமகளை விதவிதமாய் ஆடைகள் அணிய வைத்து அழகு பார்ப்பது, அவருக்கு பிடிக்காத குடிப்பழக்கத்தை நிறுத்துவது என கள்ள உறவுக்கு வலு சேர்க்கிறார்.
மனதை புரட்டிப்போடும் காமரச கதை… படம் பார்ப் போரை நல்வழி படுத்துமா? கேடு செய்யுமா? என்பதை பட்டிமன்றத்துக்குதான் விடவேண்டும்.
கிளைமாக்சில் மகனிடம் பதினெட்டு வருசம் நான் ராணுவத்தில் இருந்தபோது உங்கம்மா நேர்மையாவா இருந்திருப்பா என்று தனது தவறுக்கு நியாயம் பேசும் வசனம் பொருத்தமாய் இல்லை.
கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். கதையில் ஒன்றவைத்ததில் இயக்குனர் சாமி வென்றுள்ளார். சுந்தர்.சி. பாவுவின் இசையும், உத்பல் வி.நயனார் ஒளிப்பதிவும் பலம்.
படிப்பு ஏறாமல் வெட்டி யாக திரிபவர் ஆர்யா. அவர் அண்ணன் சுப்பு பஞ்சு, கால்நடை டாக்டர். ஒரு தங்கை. வீட்டில் அம்மாவை தவிர எல்லோரும் ஒன்றுக் கும் உதவாதவன் என அர்ச்சிக் கின்றனர். சலூன் கடை நடத்தும் நண்பன் சந்தானத்துடன் குடி கொண்டாட்டம் என சுற்றுகிறார்.
ஒரு கட்டத்தில் அரியர் தேர்வு எழுத போய் பரீட்சை ஹாலுக்கு வரும் ஆசிரியை நயன்தாராவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஏதேச்சையாக நயன் தாரா அக்காவே அண்ணன் மனைவியாக காதலை தீவிர மாக்குகிறார். அண்ணியிடம் தங்கையை தனக்கு கட்டி வைக்குமாறு கேட்கிறார். வேலை இல்லாதவருக்கு பெண் தர முடியாது என அவர் மறுக்கிறார். நயன்தாரா பெற்றோரும் ஒதுக்குகின்றனர்.
இதனால் ரோஷமாகி பணத்தோடு வருகிறேன் என சவால் விட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாஸ் ஆகா விட்டால் பணம் வாபஸ் என்ற உத்தர வாதத்தோடு டூட்டோரியல் ஆரம்பிக்கிறார். அங்கு சேரும் மாணவர்கள் படிக்காமல் ரவுடித்தனம் செய்கின்றனர். தொழில் நசுங்கும் சூழலில் இடிந்து போய் உட்காருகிறார். அதன் பிறகு அவர் எடுத்த முயற்சி என்ன? பணம்சம் பாதித்து நயன்தாராவை கை பிடித்தாரா? என்பது கிளை மாக்ஸ்…
காதலும் காமெடியுமாய் கதையை கலகலப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ராஜேஷ். கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. நகைச்சுவையிலும் பாஸ் ஆகி இருக்கிறார். சந்தா னத்துடன் இணைந்து அவர் செய்யும் லொள்ளுபடம் முழுக்க நீண்டு வயிற்றை பதம் பார்க்கிறது.
பாக்கெட்டில் பிட் பேப்பர் களை திணித்து ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என்ற அட்டவணையும் தயாரித்து பரீட்சை ஹாலுக்கு செல் வதில் இருந்து காமெடி தர்பார் ஆரம்பிக்கிறது. சந்தா னத்திடம் ஐடியா கேட்டு நயன்தாராக்கு காதல் வலை வீசி தோற்பது… அண்ணனுக்கு பெண் பார்க்க அவரது வீட்டுக்கு போய் நயன்தாரா தந்தை என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பதை தவிர்க்க சம்பந்தம் இல்லாமல் எதையோ பேசி உளறுவது… டூட்டோரியலுக்கு ஷகீலாவை டீச்சராக்கி மாணவர்களை அமைதியாக்குவது என சிரிப்பிலேயே கட்டி போடுகிறார்.
மாணவர்கள் அடாவ டியை சமாளிக்க முடியா மல் ஆசிரியர் ஓடிப்போக பார்வை இழந்த பெண்ணை ஆசிரியையாக்கி மாணவர் களை சென்டிமென்டால் வசியப்படுத்துவது ஜீவன்…
சலூன் கடை நடத்துபவ ராக வரும் சந்தானமும் திகட்ட திகட்ட காமெடி படையலிடுகிறார். ஆர்யா விடம் சிக்கி அவர் படும் அவஸ்தைகள் அமர்க் களம்…
ஆர்யாவுக்கு வேலை இல்லாததை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தும் நயன் தாரா தந்தை சித்ரா லட்சு மணனை போதையில் போய் பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்துவது தியேட்ட ரையே குலுங்க வைக்கிறது. இருவரும் “நண்பேன்டா” என உணர்ச்சி வசப்பட்டு பேசும் வசனம் ரகளை…
நயன்தாரா, காதலை மனசுக்குள் வைத்து வெறுப்பை கக்குவதில் பளிச் சிடுகிறார். ஆர்யா அண்ண னாக வரும் சுப்பு பஞ்சு ஈர்க் கிறார். பழைய பாடல் பின் னணியில் விஜயலட்சுமி மேல் காதல் வயப்படும் சீன்கள் ஆரவாரம். அறை கதவை பூட்டி மறந்து போய் சாவியுடன் ஆர்யா சினிமா வுக்கு போய் விட முதலிரவு தடைப்பட்டு இம்சைபடுவதில் வயிற்றை ரணமாக்குகிறார். அவர் மனைவியாக வரும் விஜயலட்சுமியும் அம்சம்…
ஜீவா சிறிது நேரம் வந்தாலும் கலக்கல். நான் கடவுள் ராஜேந்திரன் முரடனாக பய முறுத்துகிறார். அவர் மகனாக வரும் அஸ்வின் ராஜா சாப்பாட்டு ராமனாக கலகலப்பூட்டுகிறார்.
ஆர்யா மேல் நயன்தாரா வுக்கு காதல் மலரும் சீன் களில் அழுத்தம் இல்லை… கிளைமாக்சில் சினிமாத் தனத்தை தவிர்த்து இருக்கலாம்…
யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கவர்கிறது. ஷக்தி சரவணன் ஒளிப்பதி வும் பலம்.
நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர்
இசை: டி இமான்
தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ்
இயக்கும்: அரவிந்த் டிபடத்தின் தலைப்பப் பார்த்தாலே புரிந்துவிடும் இது எந்த மாதிரி படம் என்பது!
90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய ‘ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்’ கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது.
இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை.
தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வாழ்க்கை. ஒரு நாள், திடீரென்று மம்முட்டியை அழைக்கும் உளவுத் துறைத் தலைவர், பாகிஸ்தான் தீவிரவாதி தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும், அதை மம்முட்டிதான் முறியடிக்க வேண்டும் என்றும் (?!) கேட்டுக் கொள்கிறார்.
தென்னிந்தியாவில் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமரை (நாசர்) குண்டு வைத்துக் கொள்வதுதான் அந்தத் தீவிரவாதியின் திட்டம். இந்தத் திட்டத்தை உள்ளூர் போலீஸ் அதிகாரியான அர்ஜுடன் கை கோர்த்து எப்படி முறியடிக்கிறார் மம்முட்டி என்பதுதான், ஏகப்பட்ட கொட்டாவிகளையும் கடுப்பையும் வரவழைக்கும் க்ளைமாக்ஸ்!
இதுபோன்ற எத்தனையோ கதைகளில் மம்முட்டி அநாயாசமாக ஊதித் தள்ளிய வேடம் இது. அதனாலேயே அவர் ஒரு வித சலிப்புடன் நடித்திருப்பதாக நமக்குத் தெரிகிறது. சினேகாவுக்கு பெரிதாக வேலையில்லை. கொஞ்சம் கிளு கிளு உடைகளில் வருகிறார். டான்ஸ் போடுகிறார்… போய் விடுகிறார்.
சண்டைக் காட்சிகளில் தோன்றுவதற்காகவே அர்ஜுனிடம் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் குறை வைக்கவில்லை. கண்ணிவெடியில் கால் வைக்காமல் இருக்க மரத்துக்கு மரம் தாவித் தாவி அவர் போகையில் சிரிக்காமல் இருக்க முடியல போங்க! பிரதமராக நாசர்… சிரிக்க இன்னொரு வாய்ப்பு!
கதை இப்படி ‘காமா சோமா’ என்று இருப்பதாலேயே பாடல்கள், ஒளிப்பதிவு என எதிலும் ரசிகர்கள் கவனம் செலுத்தாமல் இருக்கையில் நெளியாய் நெளிவதைப் பார்க்க / உணர முடிந்தது!
பாரத மாதாவின் பெருமை சொல்லும் வந்தே மாதரம் என்ற மந்திரச் சொல்லை இப்படி வீணடித்திருக்க வேண்டாமே!
திருமணத்துக்கு பிறகும் மவுசு! ஐஸ்வர்யா ராய் பெருமிதம்!!
திருமணத்துக்கு பிறகும் எனக்கு வரவேற்பு இருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இருந்த அதே அழகுடன் இப்போதும் இருக்கும் ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் பிஸியான காஸ்ட்லி நடிகை.
தற்போது ஆக்ஷன் ரிப்யோ, குஜாரிஸ் ஆகிய இந்திப்படங்களில் நடித்து வரும் அவர் அளித்துள்ள பேட்டியில், நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது.
டைரக்டர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.
ராவணன் படம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஐஸ், மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் தோல்வி அடைந்தது. படத்தில் எனக்கு அளித்த பாத்திரத்தில் நன்றாக நடித்தேன். அதில் மன நிறைவு இருந்தது.
ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஏற்கவில்லை. எந்த படமும் வெற்றி பெற வேண்டுமானால் ரசிகர்களுக்கு கதை பிடிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன், என்று
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட பாடல்கள் இணையத்தில் இலவசமாக கேட்க .எந்திரன் பாடல்கள் இணையத்தில் கேட்க .
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட பாடல்கள் இணையத்தில் இலவசமாக கேட்க . ஜூலை 31 முதல் கேட்கத் தயாராகுங்கள் enthiran songs , enthiran playlist , hear songs online , online endhiran songs , play and listen endiran songs online.free endiran songs.
Demo song one Puthiya Manidha Endhiran Irumbile Oru Idhaiyam Kilimanjaro Boom Boom Robot Da
நம்ப சூப்பர் ஸ்டார்ட் எந்திரன் படம் முதல் நாள் ... முதல் ஷோ... பார்க்காம இருந்தா எப்படி....? சுட சுட படத்த பார்த்து இதை எழுதறேனுகோ.
ஒரு வழியா முட்டி மோதி டிக்கெட் வாங்கி படத்த பார்த்த பிறகு கிடைக்கும் திருப்தி இருக்கே... அட அட..... ரஜினி ரஜினி தான். வயசானாலும் அவருடைய ஸ்டைலே தனி தான். இன்னும் எத்தனை வரும் ஆனாலும் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பது நிஜம்.
படத்தின் கதையை சொல்லிவிட்டால் சுவாரிசியம் இருக்காது. படத்த பார்த்துவிட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
'பிரமாண்ட இயக்குனர்' சங்கர் - கனவு படத்தை எடுத்த திருப்தி + வெற்றிகரமாக ஓடவைத்து இருக்கிறார். திரைகதையை கையாண்ட விதம் மிக அருமை. ரஜினி என்ற நடிகரை தனது இயக்கத்தில் முற்றிலும் மறைத்து கதையின் நாயகனாக உலா விட்டிருப்பது சிறப்பு. நல்ல வேலை.... ரஜினிக்கு ஒபெனிங் சாங் வைக்காமல் புண்ணியம் செய்துகொண்டார். கடைசி 30 நிமிஷம் நன்மை கட்டிபோடுகிறார். படம் முழுவதும் கிராபிக்ஸ் மிரட்டல்.
'சூப்பர் ஸ்டார்' ரஜினி - இரட்டை வேடத்தில் மனுசர் சும்மா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். என்திரனாக அவரது நடிப்பும் இடைவேளை வரும்போது மானும் அவரது முகபாவனைகள்.... நடிப்பில் சும்மா சென்சுரி அடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் டயலாக், மிரட்டல் சண்டைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ....
'இரட்டை ஆஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் - சங்கரை போலவே படம் முழுவதும் இவரது இசை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருதியை தருவதை நம்பால் நிச்சயம் உணர முடியும். காதல் அணுக்கள் & கிளிமஞ்சாரோ பாடல்கள் முனு முணுக்க வைக்கிறது. மற்றவைகள்...சுமார் தான். இறுதியில் SBP சார் படம் ஒரு குறும் பாடல் அழகு. ரகுமானை தொடர்ந்து விரைவில் சங்கரும் ஹாலிவுட் சென்றுவிடுவார்.
'தயாரிப்பு' சன் பிச்சர் - சங்கரின் கனவை நினைவாகிய பெருமை இவர்களையே சாரும். இந்த படத்தை இவர்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதே நிஜம். சாதாரண படத்தையே நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடுவார்கள். என்திரனை சொல்லவா வேண்டும்? படமும் சூப்பர் ஹிட். சன் இனி துணித்து பல படங்களை எடுக்க வருவார்கள். நாள் படங்களை எடுத்தால் நன்று. வாழ்த்துக்கள்.
'முன்னால் உலக அழகி' ஐஸ்வர்யா ராய் - ஜீன்ஸில் பார்த்த ஐஸ் இதில் மிஸ்ஸிங்... முடித்த வரை கதையின் ஓட்டத்தில் வருகிறார். ரஜினிக்கு பல முத்தங்களை தந்து அவ்போது நம்மையும் சூடேற்றுகிறார். முகத்தில் வயதான தோற்றம் நன்கு தெரியுது.
சந்தானம், கருணாஸ், மறைந்த ஹனிபா - சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
ரசுல்குட்டியும் இரண்டாம் பாதியில் மிக அதிகமாக வேலை செய்துள்ளார். சபாஸ்.
ரொம்ப ரசித்தது
கிளிமஞ்சாரோ பாடல்
ரோபோ ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் இடமும்
ராகவ் வரும் காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த ரயில் சண்டை.... யம்மாடி.... சான்சே இல்ல.
ஹனிபாவுடன் போட்டிபோட்டு பேசும் இடம்.... ஹைலைட்.
எஜமான் படத்துல பட்டம் பூச்சி பிடிப்பது போல இங்கே கொசுவை தேடி போவதும் அதன் பிறகு நடப்பது ரசிக்க கூடியவைகள்.
காதல் காட்சியில் 'ஐஸை' முத்தம் திருப்பி தர கேட்டு மடக்கும் காட்சியில் ரஜினி - மாஸ் தான்.
முதல் பாதி - சிரிப்பு வெடி
இரண்டாம் பாதி - கிராபிக்ஸ் மிரட்டல்
எந்திரன் = கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.
1995 ம் வருடம். என்னுடைய விடலை பருவம். ரஜினி என்றால் ஏதோ சொல்ல தெரியாத ஈர்ப்பு. ஒரு பரவசம். அவரை போலவே, தலை கோதி, நடை பழகி, அவரின் பாடல்களை மனப்பாடம் செய்த தினங்கள். அதே கால கட்டத்தில் ரஹ்மான் என்னும் புயல் புது புது மெட்டுக்கள், இதற்க்கு முன் கேட்டறியாத இசை கருவிகளின் வினோத ஒலிகள், என தனக்கென ஒரு இசை சாம்ராஜியத்தை நிறுவிய நேரம். இந்த இரண்டு தலைகளும் ஒன்று சேர்கிறார்கள் "முத்து" படத்திற்காக. மொத்த தமிழ் நாடும் அந்த பட பாடல்களை கேட்க மிக ஆவலாக இருந்தது. ஏனெனனில் வழக்கமான ரஜினி பட பாடல்கள் ஒரே மாதிரி TEMPLATE ஆக இருக்கும். ஆனால் ரஹ்மானின் இசை வேறு வகை. இவர்கள் இருவரும் சேரும் போது அதில் யாருடைய ஆதிக்கம் இருக்கும் என்பது எல்லோருக்குமான சந்தேகம்.
ஆனால், அப்போதைய ரஹ்மான் புத்திசாலித்தனமாக, தனது தனித்தன்மையையும் விட்டு கொடுக்காமல், ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் போட்ட மெட்டுக்கள் பட்டி தொட்டி எங்கும் தில்லானா தில்லானா என பட்டையே கிளப்பியது. "குலுவாலிலே" அக்மார்க் ரஹ்மான் ஸ்டைல் ரஜினி பாடல். ஆனால் நாளாக நாளாக ரஜினி என்னும் ஒரு மிக பெரிய இமேஜ் வட்டத்திற்குள் ரஹ்மானின் தனி தன்மை குறைந்து போனதை மறுக்க முடியாது. ரஜினி சார் படத்திற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டியதுள்ளது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதனாலோ என்னவோ ரஜினி படங்களில் பாடல்கள் கேட்கும்படி நன்றாகவே இருந்தாலும் ரஹ்மானின் தனித்துவத்தை, ஒரு மேஜிக்கை நாம் இழப்பது வாடிக்கையாகி விட்டது.
ஆனால், எந்திரனில் ரஹ்மானின் பங்களிப்பு எப்படி..? இதற்க்கான விடைதான் கொஞ்சம் சுவாரசியம்.
"புதிய மனிதா பூமிக்கு வா" - SPB யின் குரல் அவ்வப்போது சிலிர்ப்பூட்டினாலும் கொஞ்சம் வேகம் குறைவான மெட்டு இதை ரஜினியின் INTRO பாடலாக இருக்காது என்றே எண்ண வைக்கிறது.
விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் "காதல் அணுக்கள்" - ஆல்பத்தில் ரொம்பவுமே பிரெஷ்ஷான பாடல். மெட்டும் சரி, வரிகளும் சரி கேட்டதும் பிடித்து போகும் ரகம். வைரமுத்து விஞ்ஞானத்தையும், காதலையும் மையில் கலக்கியடித்து கவிதை வடித்திருக்கிறார். என்னுடைய முதல் ஓட்டு இந்த பாடலுக்கே. ரஹ்மானின் ஸ்டைல் பாடலில் தெரிகிறது.
ரஹ்மானின் குரல் ஒரு காந்தம் போல.. எளிதில் கவர்ந்து பாடலோடு நம்மை பிணைத்து விடும். ஆனால், 'இரும்பிலே ஒரு இதயம்' பாடல் எனக்கு சரி ஏமாற்றம். வீரியமற்ற மெட்டு கவனத்தை கலைத்தாலும் ரஹ்மானின் குரலால் தப்பிக்கிறது.
"கிளி மஞ்சரோ" ஜாவித் அலி, சின்மயி குரல்களில் உற்சாகமான இசை சவாரி. பாடல் முழுக்க வித்தியாசமான இசை கோர்வைகள், சரணத்தில் சின்ன சின்ன தித்திப்புகள் என ரஜினி ரசிகர்களின் பிடித்தமான பாடலாக மாறும் தகுதி இதற்குண்டு. என்னுடைய இரண்டாவது ஓட்டு இந்த பாடலுக்கு. இனி இதை அடிக்கடி சூரியன் F .M இல் கேட்கலாம்.நிச்சயம் இந்த பாட்டு எல்லோரையும் கவர்ந்து விடும்.
"அரிமா அரிமா" பாடலின் தொடக்கம் மிரட்டுகிறது. கம்பீரமான ஆர்கேஸ்ட்ரேஷன் பாடல் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளே இழுக்க, வைரமுத்து வரிகளுக்கு தகுந்த படி ஹரிஹரன், சாதனா சர்க்கம் ஸ்ருதியே ஏற்றி இறக்கி பாடியிருக்கிறார்கள். ஷங்கர் படம் என்பதால் பாடலுக்கு தகுந்த பிரம்மாண்டமான விஷுவலை பார்க்க இப்போதே ஆர்வமாக இருக்கிறது.
"CHITTI DANCE SHOW CASE" - படத்தின் தீம் மியூசிக் போல இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் ஸ்லம் டாக் மில்லியனர் சாயல் வந்தாலும் ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில், இந்த ஆல்பத்தை பற்றி என்ன சொல்வது.,மூன்று பாடல்களில் வெளுத்து வாங்கியிருக்கும் ரஹ்மான் மிச்ச பாடல்களில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கலாம். ஆனாலும் ரஹ்மான் ஸ்டைல் மியூசிக் இந்த ஆல்பத்தில் நிறையவே இருக்கிறது. நிறைய இடங்களில் அதை ரசிக்க முடிகிறது.