Monday, October 4, 2010

சினேகாவின்.cinimaonline.blogspot.com

சினேகாவின் தலைவி பேசுகிறார்!

இந்தியா முழுவதும் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிரது 'ரெசிடெண்ட் ஈவில்' ஆஃபடர்ல்’ திரைப்படம். தற்போது பவானி ஐபிஎஸ் படத்தில் முழுமையான ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்து முடித்து அதன் வெளியீட்டுக்காக ஆவலோடு காத்திருகிறார் ஸ்னேகா. படம் வெளியான நேற்று முன்தினம் தனிப்பறவையாக இந்தப் படத்தைப் பார்க்க சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கு வந்திருந்தார் சினேகா.
அவரிடம் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை பார்க்க வந்தீர்களா என்று கேட்டதற்கு, “ ஐயோ!  மில்லா ஜோவிஸோட கிரேட் ஃபேன் நான். என்னோட தலைவின்னு கூட சொல்லுவேன்” என்று ஆச்சர்யப்படுத்தினார். சினேகாவுக்கே மில்லாவை பிடிக்கும்போது தமிழ்ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன?

இதோ ஹாலிவுட் கனவுக் கன்னிகளில் ஒருவராக வலம்வரும் மில்லா ஜோவோவிஸின் ஆபூர்வப் பேட்டி!  இவர் வடிகட்டிய வாய்ப்புகளில் மட்டுமே நடிப்பவர். அவரது நடிப்பில் தயாராகி பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான 'ரெசிடெண்ட் ஈவில்' ஆஃபடர்லில் நடித்த அனுபவங்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பேட்டியை சினேகாவுக்கு டெடிகேட் செய்துப்விடலாமா?

இனி மில்லா ஜோவோவிஸ் உங்களோடு…

சாதாரண படத்தில் நடிப்பதை விட ஒரு 3D படத்தில் நடிப்பது அதிக சவாலானதா ?

நிச்சயமாக சவாலான விஷயம்தான். Phantom தொழில் நுட்பம் என்பது சிறந்த நுட்பம்மட்டுமல்ல. நம்மை பயமுறுத்தும் பிசாசு போன்றது. ஏனென்றால் அதை வைத்து அவ்வளவு சாகசங்களை சாத்தியப்படுத்தலாம். நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நுட்பம் அது. அது ராக்கெட் வரை போய் சினிமாவுக்குள் வந்திருக்கிறது. அதற்கேற்றபடி ஒரு வினாடிக்கு 1000 ஃ பிரேம்கள் படம்பிடிக்கும் அந்த கேமராவுக்கு எற்றபடி அதுவும் 3டி தொழில்நுட்பம் சார்ந்த கதையில் நடிப்பது என்பது நிச்சயமாக சவாலான ஒன்றுதான்.

Phantom  கேமராவுக்கு ஏற்றபடி என் நடிப்பு, அசைவு, இயக்கம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியிருந்தது. லைவ் ரெக்கார்டிங் என்பதால் பின்னணிக்குரல் பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருந்தது. நான் மிகவும் பயந்து கொண்டிருந்தேன். பயமுறுத்தப்பட்டேன். துப்பாக்கியை கையாளும்போது, ஓடும்போதும், அதை ஸ்லோ மோஷனில் படம் பிடித்தார்கள். இதுபோன்ற காட்சிகளில் நடித்தபோது சினிமாவுக்கு வந்ததை நினைத்து பெருமை பட்டேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை பயந்தேன். ஒடும் போதுகூட ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றத்துடன் பார்வையும் இருக்க வேண்டும். இப்படிப் பலவாறாக சிரமங்களைச் சந்தித்தேன்.


இது மாதிரி படங்களில் உங்களுக்குப் பிடித்தது படைப்புக் கற்பனையா இல்லை… பிரம்மாண்டமா?


எனக்கு இது நாள் வரை பிடித்தது The Axe Man"  பாத்திரப் படைப்பின் பிரமாண்டம். படத்தில் அவரது பலம், பிரமாண்டம், மோதல் செமையாக இருக்கும். அவர் என்னுடனும் க்லோருடனும் மோதும் காட்சி அசத்தலாக இருக்கும். அந்த அளவுக்கு கேரக்டர்களில் உயிரோட்டமாக அமைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உடைகள் நிஜமாகப் உருவாக்கப்படவையா? அல்லது "CG" தொழில் நுட்பத்தில் உருவானவையா ?

பெரும்பாலும் நிஜமாகப் உருவாக்கப்பட்டவை. சில இடங்களில் மட்டுமே CG தொழில்நுட்பத்தில் பயன்படுத்திப்பட்டிருக்கும். 3டி படத்தில் நடிப்பது சாதாரண படத்தில் நடிப்பது போலல்ல. மிகவும் சிரமம். அதற்கான நடிப்பு தனியானது எதையும் ஆழமாக அழத்தமாக செய்ய வேண்டியிருக்கும். பாவ்லா காட்ட முடியாது. அடி. என்றால் நிஜ அடியாக இருக்க வேண்டும் உதை என்றால் நிஜ உதைதான். நடிகர் கிம் கோட்ஸ் வாங்கியது எல்லாம் நிஜ உதை தான். (சிரிக்கிறார்) இன்னொரு நடிகரும் நிஜ அடி பட்டதை பார்த்தேன்.

நீங்கள் வீடியோ கேம் விளையாடுவீர்களா?

எனக்கு இதில் விருப்பமில்லை. என் இளைய தம்பி ஒரு கேம்ஸ் பிரியன். அவன் பெரிய கேம்ஸ் விசிறி என்று தோன்றியது. பிறகு நம்மையறியாமல் அந்த உலகத்தில் புகுந்துவிட நேர்ந்தது. அதனால் நேரம் கிடைத்தால் வேறு எதிலாவது கவனம் செலுத்தவே நினைப்பேன். விரும்புவேன்.

இசை போன்றவற்றில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. அதை நடிக்கிற படங்களில் பயன்படுத்த நினைப்பீர்கள்?


எனக்குள் இசையார்வம் மறைந்திருக்கிற சக்தியாக இருக்கிறது. அதை வைத்து இதையெல்லாம் செய்யலாம் என் கிற அளவுக்கு தீர்மானம்இ திட்டம் இல்லை. கை, கால், கண் போல இசையும் எனக்கு இருக்கிற உடல் பாகமாக உணர்கிறேன். இதே படத்தை அடுத்த பாகம் எடுத்தால் இயக்குநர் தயாரிப்பாளர் கேட்டால் என்னிடம் சில ஐடியாக்கள் இருப்பது பற்றிப் பேசுவேன். இசை, பாடல் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நன்றாக இருக்கும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னொரு ரெசிடெண்ட் ஈவில் வரும் திட்டம் உத்தேசம் உள்ளதா ?

நிச்சயமாக. போ அடுத்த படத்துக்கு கதை எழுது என்றால் கூட எங்களால் முடியும். அந்த அளவுக்கு என்னைப் பாதித்துள்ள விஷயமாக இந்தப் படம்,  இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கற்பனை உலகத்தில் நாங்கள் குடியேறி விட்டோம். எனக்கு பிடித்த கதை அது. அதை முழுதாகப் படித்து போது அடுத்த என்ன நடக்கும்? என்பதே பெரிய பரபரப்பு விறுவிறுப்பாக இருந்தது.

 


No comments:

Post a Comment