Monday, October 11, 2010

பெங்களூர் – எந்திரன் ஓடும் தியேட்டர்களில் ‘ஓவர்’ வசூல்-அதிகாரிகள் அதிரடி ரெய்ட்!.cinimaonline.blogspot.com


எந்திரன் திரையிடப்பட்டுள்ள பெங்களூர் திரையரங்குகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து கர்நாடக மாநில வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகத்தில் ரூ 9.5 கோடிக்கு எந்திரன் விற்கப்பட்டது. இந்தப் படம் கிட்டத்தட்ட 60 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற மொழிப் படங்களை 24 திரையரங்குகளில் மட்டுமே திரையிட அனுமதிப்பது என்று கர்நாடக பிலிம்சேம்பர் விதிமுறை வகுத்துள்ளது. எந்திரனுக்கும் இதே அளவிலான தியேட்டர்களில் மட்டுமே படத்தை திரையிட உத்தரவிடப்பட்டதாம்.
அதேசமயம், எந்திரன் படத்துக்காக இந்த விதி தளர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அப்படி செய்ய்பபடவில்லை என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விளக்கியுள்ளது.
வர்த்தக சபை குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களுக்குப் பதில் கர்நாடகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 தியேட்டர்களில் எந்திரன்-ரோபோ திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடகத்தில் மட்டும் 58 திரையரங்குகளில் எந்திரன் / ரோபோ ஓடுகிறது.
மிகப் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியுள்ளதால் விரைவிலேயே அதை வசூலித்து விடும் நோக்கில் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வைத்து விற்கப்படுகிறதாம்.
எந்திரன் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். அதிலும் மல்டிபிளக்ஸ்களில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். குறைந்தபட்சமே ரூ 300 வரை வைத்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று பெங்களூரில் எந்திரன் ஓடும் தியேட்டர்களில் திடீர் சோதனை நடத்தினர் வணிக வரித்துறையினர். கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட விதி மீறல்கள் தொடர்பாக இந்த சோதனை நடந்துள்ளது.
இந்த சோதனை குறித்து வணிக வரித்துறையினர் கூறுகையில், முறைகேடாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தியேட்டர்களில் ரெய்டு நடந்துள்ளது உண்மைதான். அவர்களுக்கு கடும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரஹள்ளி பகுதியில் உள்ள இரண்டு தியேட்டர்களைக் கொண்ட வளாகத்தில் மிகப் பெரிய அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தியேட்டர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் கன்னடப் படங்களுக்கு முழு வரிவிலக்கு அமலில் உள்ளது. அதேசமயம், கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களுக்கு 30 சதவீதம் வரை கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!.cinimaonline.blogspot.com

சின்ன பட்ஜெட்டில் தயாராகும் மலையாளப் படங்களில் பெரிய சம்பளம் வாங்கும் ரஹ்மான் இசை சாத்தியப்படாது என்று முடிவு செய்து, அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர்.
ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.
இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள்.
ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் என்றதும் ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.

68-வது பிறந்த நாள் விழா அமிதாப்பச்சனுக்கு ரஜினி வாழ்த்து.cinimaonline.blogspot.com


இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். இன்று மாலை விருந்துக்கும் பிறந்த நாள் விழாவுக்கும் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்து கொண்டு பேசுகிறார்.
அமிதாப்பச்சன் இந்திப்பட உலகில் தொடர்ந்து கலக்கி வருகிறார். சமீபத்தில் சிறுவனாக நடித்த “பா” படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. டி.வி.யில் குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மொழிகளை கடந்து ரசிகர்களை கவர்ந்தார்,
2008-ல் 66-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடியபோது அமிதாப்பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் திரை உலகுக்கு வந்தார். இளம் தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நடிப்பில் கலக்குகிறார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த சுந்தகார் படப்பிடிப்பு இருவாரத்துக்கு முன்பு முடிவடைந்தது. தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.
பிறந்த நாளையொட்டி இன்று காலை அமிதாப்பச்சன் வீட்டின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தியில் அமிதாப்பச்சன் பேசும்போது எனது மனதையும் உடம்பையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்கிறேன். கெட்ட சிந்தனைகளை எனக்குள் நான் அனுமதிப்பதே இல்லை. இதனால் தான் இன்னும் நான் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் இருக்கிறேன் என்றார்.

துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி நீது சந்திரா காயம்!.cinimaonline.blogspot.com

அமீர் இயக்கும் ஆதி பகவன் படப்பிடிப்பின் போது துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி சென்றதால் நடிகை நீத்து சந்திரா காயம் அடைந்தார்.
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடிக்கும் படம் ஆதிபகவன். அமீர் இயக்குகிறார். திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த போது விபத்து ஏற்பட்டு நீது சந்திரா காயம் அடைந்தார்.
அவர் உதட்டில் துப்பாக்கி குண்டு உராய்ந்து சென்றது. ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து பற்றி நீது சந்திரா கூறுகையில், “ஆதிபகவன் படத்தில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. தாய்லாந்து துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் காரில் இருந்து இறங்கி கப்பலை நோக்கி செல்வது போன்று காட்சி எடுத்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடப்பது போல் சீன்கள் வைத்து இருந்தனர்.
ஷாட் ஓகே சொன்னதும் காரில் இருந்து இறங்கி நடந்தேன். அப்போது ஒரு குண்டு என்னை நோக்கி வந்தது. நான் விலகினேன். ஆனாலும் என் உதட்டில் உராய்ந்தபடி சென்றது. இதனால் உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் வலி தாங்க முடியாமல் அழுதேன். பார்வை மங்கியது. உடனடியாக முதலுதவி சிகிச்சசை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். இப்போது ஓய்வில் உள்ளேன்”, என்றார்.

அக்கான்னு கூப்பிட்டு…! – நயன்தாரா பற்றி ரம்லத்.cinimaonline.blogspot.com

அக்கா அக்கா என்று என்னிடம் பாசமாகப் பழகுவது போல நடித்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் என் கணவரையே தனக்கு மாப்பிள்ளையாகக் கேட்டுவிட்டார். எந்தப் பெண்ணும் கேட்காததைக் கேட்டார் நயன்தாரா, என்று குமுறியுள்ளார் ரம்லத்.
வில்லு படத்தில் நடிக்கும்போதுதான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் வீடு வரை வந்து ரம்லத்திடம் சொந்த தங்கையைப் போல பழகினாராம் நயன்.
பின்னர் ஒரு நாள் திடீரென்று பிரபுதேவாவை நானும் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஒரே வீட்டில் இருக்கலாம்னாலும் ஆட்சேபணை இல்லை என்றாராம் நயன்தாரா.
இதுகுறித்து இப்படிக் கூறுகிறார் ரம்லத்:
சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. அவங்களை பாசத்தோடதான் உபசரிப்பேன். எங்களுக்கு சோறு போடுற தொழிலாச்சே. அந்த மாதிரிதான் அந்த பெண்ணையும் ஆரம்பத்துல பார்த்தேன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை சார்னும் என்னை அக்கான்னும் கூப்பிடும்.
ஆனா அது மனசுல இந்த மாதிரி அநியாயமான ஒரு ஆசை இருக்குதுங்குறது எனக்கு தெரியாம போச்சு. இல்லாட்டி என் வீட்டுக்கே வந்து என் புருஷனை விட்டு தரச்சொல்லி கேக்குற வரைக்கும் அதை நம்பியிருப்பேனா? உலகத்துல ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட கேட்க கூடாததை எங்கிட்ட கேட்டுச்சு. அன்னைக்குதான் வாழ்க்கையிலேயே நான் தூங்காத முழு ராத்திரி.
மூத்த பையன் விஷால் கேன்சர்ல இறந்த துக்கத்துல இருந்து முழுசா மீண்டு வராத நிலையில எங்கிட்ட வந்து இப்படி கேட்டாங்க.
விஷால் விஷயத்துல கூட பிரபுதேவா அக்கறையே காட்டல. உடலை அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி. மறுநாள் அந்த பொண்ணோட கிளம்பிட்டார்.
பையன் போயிட்டானே என்ற கவலையெல்லாம் நயன்தாரா வந்ததும் ரெண்டாந்தரமா போச்சு. மொத்தத்துல அக்கான்னு சொல்லி வீட்டுக்குள்ளே வந்தவங்களை நம்புனதாலதான் இப்ப சக்களத்தி சண்டை போட வேண்டியிருக்கு.
வர்றபோதெல்லாம் சாக்லெட், டிரஸ்னு வாங்கிட்டு வந்ததால பசங்களும் ஆன்ட்டின்னு பிரியா பழகுனாங்க. எல்லாம் வேற நோக்கம்னு அந்த பிஞ்சுகளுக்கே இன்னிக்கு தெரிஞ்சுருச்சு. அந்த பொண்ணு போட்டோவை பார்த்தா கிழிச்சு போடுறாங்க. டிவியில அவங்க நடிக்கிற படம் வந்தா ஆஃப் பண்ணிடுறாங்க. ராத்திரி து£க்கத்துல பாதியில எழுந்து அப்பா எங்கம்மான்னு கேக்குறான் கடைசி பையன் ஆதித். மன ரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க…”, என்று கூறியுள்ளார்.